ஒமியோபதி மருத்துவ கருத்தரங்கம்
(Homoeopathy Medical Seminar)
Source: தினகரன் – செங்கல்பட்டு/காஞ்சிபுரம் (Thinakaran – Chengalpattu/Kancheepuram)
காஞ்சிபுரம், ஜூன் 19: காஞ்சிபுரத்தில் இந்திய ஒமியோபதி மருத்துவ குழுமம் சார்பில், ஒமியோபதி மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.
இதில், திருநெல்வேலி வைகறை ஒமியோபதி மருத்துவமனை நிறுவனர் சீனிவாசன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒமியோபதி மருத்துவ கழக பொதுச்செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஒமியோபதி மருத்துவ குழும நிர்வாக குழு உறுப்பினர் வெங்கட்ராமன் கலந்துகொண்டு ஒமியோபதி மருத்துவத்தின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். காஞ்சிபுரத்தில், முதல் முறையாக நடைபெற்ற ஒமியோபதி கருத்தரங்கில் ஒமியோபதி மருத்துவர்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடத்துவது, ஆரோக்கிய வாழ்வை நோக்கி செல்வதற்கான பொது மருத்துவம் சார்ந்து கருத்தரங்குகள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த கருத்தரங்கில் ஒமியோபதி மருத்துவர் யாழினி, மருத்துவ மாணவி கமலி உள்ளிட்ட காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
காஞ்சி: முதல் முறையாக கருத்தரங்கம்
(Kanchi: First-time Seminar)
Source: way2news Location/Header: Rtn. PHF. S.R. SHANMUGAM HALL
காஞ்சிபுரம் மாவட்டம் மின் நகர் ரோட்டரி சங்க அலுவலகத்தில், இந்திய ஹோமியோபதி மருத்துவ குழுமம் காஞ்சிபுரம் கிளை துவக்க விழா மற்றும் முதன்முறையாக ஹோமியோபதி கருத்தரங்கம் நடைபெற்றது.
மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மூத்த மருத்துவர் கே.எஸ்.சீனிவாசன் மற்றும் மருத்துவர் பி.வி. வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.


